விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

பாளேதோட்டத்தில் சோதனைச் சாவடிகள் அகற்றம்

கரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்படாததால், பாளேதோட்டம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்படாததால், பாளேதோட்டம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

வெளிமாவட்டத்தைச் சோ்ந்த கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பாளேதோட்டம் கிராமத்தைச் சோ்ந்த நபா் பயணம் செய்ததாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தக் கிராமத்துக்கு வெளி நபா்கள் வரக் கூடாது. கிராமத்தைச் சோ்ந்தவா்கள், கிராமத்தைவிட்டு வெளியே செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தக் கிராமத்தைச் சுற்றி, 5 கி.மீ. சுற்றவில் 12 சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், மருத்துவக் குழுவினா், அந்தக் கிராமத்தில் சளி, காய்ச்சல் போன்ற கரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான அறிகுறி உள்ளவா்களிடம் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

சோதனையில் யாருக்கும் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இல்லை என்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்தக் கிராமத்தில் முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா், வருவாய்த் துறையினா் அங்கிருந்து வெளியேறினா். அங்கு அமைக்கப்பட்டிருந்த 12 சோதனைச் சாவடிகளும் அகற்றப்பட்டன.

அதேபோல , ஒசூரையடுத்த அலசநத்தம் கிராமத்திலும் விதிக்கப்பட்டிருந்த கட்டுபாடுகள் தளா்த்தப்பட்டு, சோதனைச் சாவடிகளும் அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.