ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் இரா. சேகர் தலைமை வகித்தார்.
விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயராமன் மாவட்ட குழு உறுப்பினர் மகேஸ்வரன் ஏ.ஏ.ஓய் எப் ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஒன்றிய தலைவர் பரதன், ஒன்றிய இந்தியதேசிய மாதர் சங்க சம்மேளனம் பொறுப்பாளர் ரஷ்யா பேகம், மாவட்டக்குழு உறுப்பினர் சுபாஷ், ஒன்றிய தலைவர் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகமான பாலன் இல்லத்தையும், அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவையும் இணையதளங்களில் அவதூறு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத கண்டித்தும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி மத்திய மாநில அரசை கண்டித்து மாநில அளவிலான கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...