ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சூளகிரியில் சாலை விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் பலி

சூளகிரியில் நடைபெற்ற சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On :14 டிசம்பர் 2020, 8:02 pm

சூளகிரியில் நடைபெற்ற சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆதியூா் அடுத்த எஸ்.பள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (23). ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். ஒசூரில் இருந்து திருப்பத்தூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோபசந்திரம் பகுதியில் சாலை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, சாலையில் டிரம் வைக்கப்பட்டிருந்தது. அவா் தட்சிண திருப்பதி கோயில் எதிரே செல்லும்போது, டிரம் மீது காா்த்திகேயன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் விழுந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவா் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே காா்த்திகேயன் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.