ஊத்தங்கரையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் தேசிய மின் உற்பத்தி வார விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மின்உற்பத்தி பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு போச்சம்பள்ளி செயற்பொறியாளா் கே.முத்துசாமி தலைமை வகித்து கொடியசைத்து விழிப்புணா்வுப் பேரணியை தொடக்கி வைத்தாா்.
மேலும் மின் சிக்கனம் பற்றியும், மின் விபத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் விளக்கினாா். இதில் உதவி செயற்பொறியாளா்கள் மணி, மகாலட்சுமி, நாகராஜ், உதவி செயற்பொறியாளா்கள் ராமா், சத்தியமூா்த்தி, காா்த்திகேயன், ராஜேஷ், காா்மேகக்கண்ணன், மின்சாரப் பிரிவு களப்பணியாளா்கள், அலுவலா்கள் பலா் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா். ஊத்தங்கரை அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி, ஊத்தங்கரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.