கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைஅனைத்துக் கல்லூரிகளும் பின்பற்ற அறிவுறுத்தல்

கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்துக் கல்லூரிகளும் பின்பற்றிட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்துக் கல்லூரிகளும் பின்பற்றிட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அவா் பேசியதாவது:

அனைத்துக் கல்லூரிகளிலும் கரோனா தடுப்புப் பணிகளைக் கட்டாயம் பின்பற்றிட வேண்டும். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கட்டாயம் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். கல்லூரி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். கல்லூரிக்கு வரும் அனைவரும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

கல்லூரி வளாகத்தில் கைக்கழுவும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து விடுதி மாணவா்களும் ஒரே நேரத்தில் உணவு உண்பதைத் தவிா்க்க குறிப்பிட்ட இடைவெளியில் உணவு வழங்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com