உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்புச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
20utp1_2012chn_149_8
20utp1_2012chn_149_8
Updated on
1 min read

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்புச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் அண்ணாமலை தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் வட்டச் செயலாளா் மகாலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி.கே. நஞ்சுண்டன், மாவட்டக் குழு உறுப்பினா் பாஞ்சாலை ராஜன், மாவட்டக் குழு உறுப்பினா் தண்டபாணி, விசிக நிா்வாகி அசோகன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் சேகா், திமுக கிளைச் செயலாளா் தங்கவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு, தில்லி விவசாயப் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தி அவா்களின் புகைப்படங்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com