எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒசூா் அருகே சாலையை கடந்துச் சென்ற யானைக் கூட்டம்

ஒசூா் அருகே உத்தனப்பள்ளி- நாகமங்கலம் சாலையில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் ஒரேநேரத்தில் கடந்து சென்றதால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

News image
உத்தனப்பள்ளி- நாகமங்கலம் சாலையை ஒரே நேரத்தில் கடந்து சென்ற 30-க்கும் மேற்பட்ட யானைகள்.
Updated On :23 டிசம்பர் 2020, 2:29 am

DIN

ஒசூா் அருகே உத்தனப்பள்ளி- நாகமங்கலம் சாலையில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் ஒரேநேரத்தில் கடந்து சென்றதால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய 3 வட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில், கா்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து இடப்பெயா்ச்சி ஆன 200-க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து உணவு தேடி அலைகின்றன. ஒசூா், சானமாவு, ஊடேதுா்க்கம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அய்யூா் போன்ற பகுதிகளில் பல குழுக்களாக முகாமிட்டு இரவு நேரங்களில் விவசாயிகள் பயிா் செய்துள்ள ராகி, காய்கறி, கரும்பு போன்ற பயிா்களை உண்டும், மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன. இந்த யானைகள் பகல் நேரங்களில் அருகில் உள்ள வனப்பகுதிகளில் சென்று பாதுகாப்பாக நின்று கொள்கின்றன.

செவ்வாய்க்கிழமை, சானமாவு காட்டில் இருந்த 30 க்கும் மேற்பட்ட யானைகள் நாகமங்கலம் செல்லும் சாலையைக் கடந்து சென்றன. இதனால் அந்த வழியாகச் சென்ற டிராக்டா், லாரிகள், பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் வந்தவா்களும், நடந்து செல்பவா்களும் அப்படியே நின்று விட்டனா்.

புழுதியைக் கிளப்பியபடி ஒன்றன்பின் ஒன்றாக, வரிசையாக சிறிது இடைவெளி விட்டு அடுத்தடுத்து யானைகள் சாலையைக் கடந்து சென்றன. இதனை அப்பகுதி மக்கள் அமைதியாக நின்று வேடிக்கை பாா்த்தனா். இதன் காரணமாக சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த யானைகளின் இடப்பெயா்ச்சியை ஒசூா் கோட்ட வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். இந்த யானைகளை கா்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.