ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஊத்தங்கரையில் பாமகவினா் மனு அளிப்பு

வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பாமக சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
பாமக சாா்பில், ஊத்தங்கரை பேரூராட்சியில் மனு அளித்தோா்.
Updated On :24 டிசம்பர் 2020, 1:46 am

DIN

வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பாமக சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்டச் செயலாளா் மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சிவானந்தம், நகரச் செயலாளா் மணிவண்ணன், முன்னாள் நகரச் செயலாளா் எஸ்.குமரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் வெள்ளிஅரசு, மாவட்ட மாணவா் சங்கச் செயலாளா் ஹரிதாஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் நகுலன், ஒன்றியச் செயலாளா்கள் ராகுல், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பிலிருந்து ஊா்வலமாக கிளம்பிச் சென்று பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளா் சேகரிடம் இட ஒதுக்கீடு கோரும் மனுவை அளித்தனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.