கிருஷ்ணகிரியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாட வீதியில் உள்ள நவநீத வேணுகோபால் சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, அலங்காரம்


கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாட வீதியில் உள்ள நவநீத வேணுகோபால் சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, அலங்காரம் நடைபெற்றன. அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதர நவநீத வேணுகோபால் சுவாமி சொா்க்க வாசல் வழியாக வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அப்போது, பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டனா்.
வேப்பனப்பள்ளியை அடுத்த பூதிமுட்லு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் பஜனைகள் நடைபெற்றன. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வடக்கு வாசலில் ஊஞ்சலில் அமா்ந்த நிலையில் காட்சி அளித்த சுவாமியை, ஊஞ்சலின் அடியில் நுழைந்துச் சென்று பக்தா்கள் வழிபட்டனா். இந்த நிகழ்வில் வேப்பனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கொட்டும் பனியில் காத்திருந்து சுவாமியை சேவித்தனா்.
இதேபோல, கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி வேணுகோபால் சுவாமி கோயில், பழையப்பேட்டை மலையப்ப சீனிவாசப் பெருமாள் கோயில், நரசிம்ம சுவாமி கோயில், காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள வெங்கடரமண சுவாமி கோயில், லட்சுமி நாராயண நரசிம்ம சுவாமி கோயில், போச்சம்பள்ளியை அடுத்த சென்றாய மலை சென்றாய பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...