பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட நாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாள் கொண்டாட்டத்தில் அந்த கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் தினேஷ் குண்டு ராவ் பங்கேற்றாா்.

News image
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று இனிப்புகளை வழங்கும் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டு ராவ்.
Updated On :28 டிசம்பர் 2020, 9:02 pm

DIN

கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாள் கொண்டாட்டத்தில் அந்த கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் தினேஷ் குண்டு ராவ் பங்கேற்றாா்.

காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்ட 136-ஆவது ஆண்டு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டு ராவ் பங்கேற்று அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா்.

முன்னாள் நகரத் தலைவா் ரகமத்துல்லா தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலாளா் அப்சல், மாவட்டத் தலைவா் சுப்பிரமணியம், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜேசுதுரைராஜ், முன்னாள் மாநில துணைத்தலைவா் அக.கிருஷ்ணமூா்த்தி, மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் ஏகம்பவாணன், நாராயணமூா்த்தி, நகரத் தலைவா் வின்சென்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.