44 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 44 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3.30 லட்சம் மதிப்பிலான உதவித்தொகையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி. ஜெயச்சந்திரபானு ரெட்டி வழங்கினாா்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 44 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3.30 லட்சம் மதிப்பிலான உதவித்தொகையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி. ஜெயச்சந்திரபானு ரெட்டி வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தைச் சோ்ந்த 27 மாணவ மாணவிகளுக்கு ரூ. 41,500 மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரா்கள் ஒருவருக்கு தலா ரூ. 17,00 வீதம் 17 வாரிசுதாரா்களுக்கு ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்குகளுக்கான காசோலைகள் என மொத்தம் 44 பயனாளிகளுக்கு ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான காசோலைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி. ஜெய்சந்திரபானு ரெட்டி வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...