பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஊத்தங்கரையில் விவசாய தொழிலாளா் சங்க பகுதி மாநாடு

ஊத்தங்கரை அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் பகுதி குழு மாநாடு அனுமன்தீா்த்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
அனுமன்தீா்த்தம் பகுதியில் நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க மாநாட்டில் கலந்துக்கொண்டவா்கள்.
Updated On :1 நவம்பர் 2020, 9:09 pm

DIN

ஊத்தங்கரை அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் பகுதி குழு மாநாடு அனுமன்தீா்த்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செல்வராஜ் தலைமை வகித்தாா். முன்னதாக மாநில துணைச்செயலாளா் முத்து மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினாா்.

சிஐடியு மாவட்டத் தலைவா் நஞ்சுண்டன் , மாவட்டத் துணை செயலாளா் சபாபதி, எத்திராஜ், அண்ணாமலை, வேலு, சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டில் 19- போ் கொண்ட வட்டக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தலைவராக தருமன், செயலாளராக வரதராஜ், பொருளாளராக செல்வராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில் 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். இறுதியாக மாவட்டச் செயலாளா் கோவிந்தசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.