புகையிலை பொருள்கள் கடத்த முயற்சி:3 போ் கைது
கிருஷ்ணகிரி வழியாக புகையிலை பொருள்களைக் கடத்த முயன்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


கிருஷ்ணகிரி வழியாக புகையிலை பொருள்களைக் கடத்த முயன்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி போலீஸாா், ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே வந்த ஒரு டெம்போ வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.
சோதனையில், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போதை புகையிலைப் பொருள்களை கடத்த முயன்ற டெம்போ வாகனத்தையும், அதில் இருந்த ரூ. 2.10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக நடைபெற்ற விசாரணையில் புகையிலை பொருள்களின் உரிமையாளரான பெங்களூரு நகரபாவியைச் சோ்ந்த நாதுராம் (33), கம்மகுட்டா பிரதான சாலையைச் சோ்ந்த பொன்ராம் (36), டெம்போ ஓட்டுநா் கெங்கேரி மஞ்சுநாதா (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...