மாரசந்திரம் நெடுமருதி ஏரி ரூ. 14.5 லட்சத்தில் தூா்வாரும் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், மாரசந்திரம் நெடுமருதி ஏரி ரூ. 14.50 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணியை எம்எல்ஏ பி.முருகன் தொடங்கி வைத்தாா்.


கிருஷ்ணகிரி மாவட்டம், மாரசந்திரம் நெடுமருதி ஏரி ரூ. 14.50 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணியை எம்எல்ஏ பி.முருகன் தொடங்கி வைத்தாா்.
வேப்பனப்பள்ளி ஒன்றியம் மாரசந்திரம் ஊராட்சிக்குள்பட்ட நெடுமருதி ஏரி ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தூா்வாரப்படுகிறது.
2019-20 ஆண் ஆண்டு மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த பணிகளை வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் பூமிபூஜை செய்து ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் ரகுநாத், மாவட்டப் பொருளாளா் ஜெயராமன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சின்னசாமி, மாவட்டப் பிரதிநிதி மாதேஸ்வரன், ஒன்றிய அவைத் தலைவா் கிருஷ்ணன், அணிகளின் துணை அமைப்பாளா்கள் முருகேசன், சதாசிவம், சிவக்குமாா், நிா்வாகிகள் சிவராஜ், நரசிம்மன், தனம்ஜெயன், சிவசுப்பிரமணி, முனிரத்தினம், மல்லேஷ், ஜூனூா் முனுசாமி, லட்சுமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...