பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுநீா் கலப்பு

ஒசூா் அருகே தென்பெண்ணையாற்றில் நீா்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சாலையின் ரசாயனம் கலந்த கழிவுநீரால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:53 pm

DIN

ஒசூா் அருகே தென்பெண்ணையாற்றில் நீா்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சாலையின் ரசாயனம் கலந்த கழிவுநீரால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கா்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக 560 கனஅடி நீா் வந்து கொண்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாக உள்ளநிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 40.02 அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி வரத்தாகும் 560 கன அடி நீரும், மிகை நீராக மதகுகளின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

தென்பெண்ணையாற்றில் வரும் அதிகப்படியான நீரால், கா்நாடகா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் தொடா்ந்து ஆற்றில் கலந்து, வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த ரசாயனக் கழிவுநீரின் நுரை ஒசூா் கெலவரப்பள்ளி அணைப்பகுதிகளில் குவியல், குவியலாகக் குவிந்து காணப்படுகின்றன.

மத்திய பசுமை தீா்ப்பாயத்தின் ஆணைப்படி கடந்த சில நாள்களுக்கு முன் தமிழக கா்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தென்பெண்ணை ஆற்றில் நீா் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனா். இதனையும் பொருட்படுத்தாமல் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருவது விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் அதிா்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.