பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விபத்தில்லா தீபாவளி: பர்கூரில் தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்

பர்கூர் பேருந்து நிலையத்தில் பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினரால் விபத்தில்லா தீபாவளி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும்,

News image
பர்கூரில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட தீயணைப்புத்துறையினர்.
Updated On :9 நவம்பர் 2020, 8:10 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேருந்து நிலையத்தில் பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினரால் விபத்தில்லா தீபாவளி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தில் தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர். 

பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டு வேலு தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் முகக்கவசம் அணிந்து பர்கூர் பேருந்து நிலையம், ஜெகதேவி ரோடு, டெக்ஸ்டைல்ஸ் மார்க்கெட் பகுதி, திருப்பத்தூர் ரோடு, அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். அப்போது தீபாவளியின் போது பட்டாசு வெடித்து ஏதாவது விபத்து நேரிட்டால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தரவும் பொதுமக்கள் அனைவரும் தீபாவளி நேரத்தில் ஏற்படும் தீவிபத்துகள் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்குமாறு மேலும் தீ பரவாமலும் விபத்து அதிகரிக்காமலும் தடுக்க தீயணைப்புத்துறையினர் எந்த நேரமும் தயார் நிலையில் இருப்பதாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

Story image

எனவே பொதுமக்களும் தீயணைப்புத் துறையினருக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் பட்டாசு கடை நடத்தும் உரிமை பெற்றவர்களும் அரசு வழங்கியுள்ள நிபந்தனைகள்படி கடையை நடத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.