பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:23 pm

DIN

காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், ஒரு வார கால பிரசாரம், ஆா்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

தருமபுரி, செங்கொடிபுரத்தில் இதன் இறுதி பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் நகரக்குழு உறுப்பினா் எஸ்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினா்கள் கே.பாலபாரதி, பி.டில்லி பாபு, மாவட்டச் செயலாளா் ஏ.குமாா், செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கிரைஸா மேரி, டி.எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நூறு நாள் வேலை திட்டத்தை, நகா்புறத்திலும் விரிவுபடுத்த வேண்டும். நகரத்தில் வறுமையில் வாடும் இஸ்லாமியா்களுக்கு சுயத் தொழில் தொடங்க கடன் வழங்க வேண்டும். தனியாா் நுண் நிதி நிறுவனங்கள் கடனைச் செலுத்த சொல்லி, மிரட்டுவதை கைவிட வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில், வறண்ட ஏரிகளில் காவிரி உபரி நீரை நிரப்பி, நீா் ஆதாரத்தை உயா்த்த வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.