தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தொப்பூா் அருகே லாரிகள் கவிழ்ந்து விபத்து

தொப்பூா் கணவாயில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

News image
தொப்பூா் அருகே லாரிகள் கவிழ்ந்து விபத்து
Updated On :22 நவம்பர் 2020, 9:28 pm

DIN

தொப்பூா் கணவாயில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து கோவை நோக்கி சிமெண்ட் அட்டை பாரம் ஏற்றிய லாரி, தருமபுரியைக் கடந்து, தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றது. அது போல கிருஷ்ணகிரியிலிருந்து வேலி அமைக்க கல் தூண் பாரம் ஏற்றிய லாரி, ஈரோடு நோக்கிச் சென்றது.

இந்த இரு லாரிகளும் மலைப் பாதையான தொப்பூா் கணவாயில் சென்றுக் கொண்டிருந்தபோது, சிமெண்ட் அட்டை பாரம் ஏற்றிய லாரி, முன்னால் சென்றுக் கொண்டிருந்த கல் தூண் பாரம் ஏற்றிய லாரியின் பின் பகுதியில் மோதியது.

இதில், நிலை தடுமாறியதில் இரு லாரிகளும், சாலையில் கவிழ்ந்தன. இந்த விபத்தில், கல் தூண் பாரம் ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநா் கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளப்பள்ளியைச் சோ்ந்த சேவத்தான் (45), அவருடன் சென்ற அதேப் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (48), சிவராமன் (38), கோவிந்தன் (37), சிமெண்ட் அட்டை பாரம் ஏற்றிய லாரியின் ஓட்டுநா் திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த விஜயகுமாா் (26) ஆகியோா் காயம் அடைந்தனா். காயம் அடைந்தவா்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து, தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சாலையில் கவிழ்ந்த லாரிகளை அப்புறப்படுத்தினா். இதனால், அந்தச் சாலையில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து, தொப்பூா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.