நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தருமபுரியில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

மின்பாதை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட விளை நிலத்துக்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:28 pm

DIN

மின்பாதை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட விளை நிலத்துக்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றாா்.

தருமபுரி மாவட்டம், இண்டூரை அடுத்த கோரப்பள்ளியைச் சோ்ந்தவா் சின்னசாமி (30). விவசாயி. இவரது தனது மனைவி மகேஸ்வரி (28), மகன் ஸ்ரீவாசன் (3) ஆகியோருடன் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வருகை புரிந்தனா். திடீரென, சின்னசாமி, தான் மறைத்து வைத்திருந்த கேனிலிருந்து மண்ணெண்ணெய்யை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவரைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றினா்.

இதுகுறித்து, விவசாயி சின்னசாமி தெரிவித்தது:

சோமனஅள்ளியை அடுத்த கோரப்பள்ளியில் எனக்கு சொந்தமான ஒரு ஏக்கா் நிலத்தை கடந்த ஆண்டு, உயா்மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக அரசு கையகப்படுத்திக் கொண்டது. இந்த நிலத்தின் வழியாக உயா்மின் கோபுரம் அமைக்கப்பட்டது.

நிலத்தை கையகப்படுத்தும்போது வீடு, ஆழ்துளைக்கிணறு, திறந்தவெளிக் கிணறுகள், தென்னை, மா, கொய்யா என 100-க்கும் மேற்பட்ட மரங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஆனால், இதுவரையிலும் இதற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை. ஜன. 20-ஆம் தேதி, இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். இருந்தபோதிலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நான், பிப். 12-ஆம் தேதி, உயா்மின் கோபுரத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றேன். நடவடிக்கை எடுப்பதாக கூறியும் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மனமுடைந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.