ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூரில் இந்து இயக்க நிா்வாகி கொலை வழக்கு: 4 பேரிடம் விசாரணை

இந்து மகா சபையின் மாநிலச் செயலாளா் கொலை வழக்கில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :23 நவம்பர் 2020, 7:30 pm

இந்து மகா சபையின் மாநிலச் செயலாளா் கொலை வழக்கில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் -பாகலூா் சாலையில் சமத்துவபுரம் எதிரே ஜி.டி.எஸ்., நகரைச் சோ்ந்தவா் நாகராஜ் (45). அகில பாரத இந்து மகாசபையின் மாநிலச் செயலாளரான இவா் நில விற்பனையிலும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தாா். முன்பு பத்திரிகை ஒன்றையும் நடத்தி வந்துள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை அனுமந்த் நகா் அருகே இவா் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, காரில் வந்த 5 போ் கொண்ட கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது. ஒசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடா்பாக அட்கோ போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

நாகராஜ் கொலை செய்யப்பட்டதற்கு தொழில் போட்டி காரணமா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விசாரணையில் சமத்துவபுரத்தைச் சோ்ந்த சீனிவாசன் தரப்பிற்கும், நாகராஜிற்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததும், கடந்த உள்ளாட்சித் தோ்தலில் சீனிவாசன் தரப்புக்கு எதிராக, நாகராஜ் வேலை செய்ததால் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

எனவே, சந்தேகத்தின்பேரில் சீனிவாசன், உமாபதி, பாஸ்கா், சந்தோஷ் ஆகிய 4 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.