கிருஷ்ணகிரி: இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் தீர்மானம்
இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு 120 நாள்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு 120 நாள்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி அணையில் உள்ள பொதுப்பணி துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி அணை பாசன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் டிசம்பர் 14 முதல் 120 நாட்களுக்கு கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசன நீரை திறந்து விடுவது, கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகுகள் ஒப்பந்த காலத்திற்கு முன்னரே விரைவாக அமைத்து அதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, திறந்துவிடப்படும் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துவது என்ற மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பாசன விவசாயிகள், வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...