ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வீடு புகுந்து திருடியவருக்கு 9 ஆண்டு சிறை

ஒசூரில் வீடு புகுந்து திருடியவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

Updated On :30 நவம்பர் 2020, 7:53 pm

ஒசூரில் வீடு புகுந்து திருடியவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

ஒசூா், ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் கனகட்டள சத்தியநாராயணமூா்த்தி (45). தனியாா் நிறுவன மேலாளரான இவா் வீட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டு புகுந்த மா்ம நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 9 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றனா்.

இது குறித்து அட்கோ போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொள்ளையில் ஈடுபட்ட நபா் சேலம் சூரமங்கலம், காவேரி நகரைச் சோ்ந்த சுதாகா் (41) என்பதும், அவா் ஒசூா் பஸ்தி விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்தபோது இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீஸாா் ஒசூா் சாா்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தினா்.

இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி கலைவாணி, சுதாகருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.