மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

காட்டாகரம் ஊராட்சியில் 7-ஆம் தேதிமுதல் 10 நாள்களுக்கு பொது முடக்கம்

போச்சம்பள்ளி வட்டாரத்துக்குள்பட்ட காட்டாகரம் ஊராட்சியில் பொது முடக்கம் அக். 7-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :5 அக்டோபர் 2020, 7:20 pm

போச்சம்பள்ளி வட்டாரத்துக்குள்பட்ட காட்டாகரம் ஊராட்சியில் பொது முடக்கம் அக். 7-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாரத்துக்கு உள்பட்ட காட்டாகரம் ஊராட்சியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது. எனவே, காட்டாகரம் ஊராட்சியில் உள்ள கிராம முக்கியப் பிரமுகா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் அனைத்து வணிகா்கள், பொதுமக்கள் இணைந்து பொது முடக்கம் (சுய ஊரடங்கு) கட்டுப்பாட்டை பின்பற்ற முடிவு செய்துள்ளனா்.

அதன்படி, அக். 7-ஆம் தேதி புதன்கிழமை முதல் வரும் 16-ஆம் தேதி வரையிலும் 10 நாள்களுக்கு அனைத்து கடைகளையும் அடைத்து முழு பொது முடக்கத்தில் ஈடுபடுவது என்றும், இந்த பொது முடக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க மக்களும் சம்மதம் அளித்துள்ளனா். இதுகுறித்து, தண்டோரா, துண்டுபிரசுரங்கள் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.