மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

உரக் கடைகளில் விலைப்பட்டியல்: விவசாயிகள் வலியுறுத்தல்

உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனைக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

Updated On :5 அக்டோபர் 2020, 7:21 pm

உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனைக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி அணை நீா்ப்பிடிப்பு உபரிநீா் இடது கால்வாய் பயன்பெறுவோா் சங்கம் சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம் வருமாறு:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, பா்கூா் மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான உரம், பூச்சிக்கொல்லி மருந்துக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்படுவதில்லை. கடை உரிமையாளா்கள் சொல்லும் விலைக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கிச் செல்லும் கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனா்.

இதனால் சிறு, குறு விவசாயிகள் பெரிதும் ஏமாற்றப்படுகின்றனா். எனவே, பூச்சி மருந்து விற்பனைக் கடைகளை அலுவலா்கள் ஆய்வு செய்து, விலைப்பட்டியல் வைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.