ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அவசர சட்டங்கலை வாபஸ் பெறக் கோரி கெலமங்கலத்தில் சிபிஐ மறியல் போராட்டம்

ஒசூா், கெலமங்கலம், வேப்பனப்பள்ளி, மத்திகிரி, பாகலூா் ஆகிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image

கெலமங்கலத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் மற்றும் சிபிஐ கட்சியினா்

Updated On :12 அக்டோபர் 2020, 7:49 pm

ஒசூா், கெலமங்கலம், வேப்பனப்பள்ளி, மத்திகிரி, பாகலூா் ஆகிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கெலமங்கலம் பேருந்து நிலையம் அருகே தேன்கனிக்கோட்டை சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாநில குழு உறுப்பினா் லகுமைய்யா தலைமை தாங்கினாா். ஒன்றியச் செயலாளா் ஜெயராமன், நகரச் செயலாளா் நாகராஜ், கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவா் கேசவமூா்த்தி, மாவட்டக் கவுன்சிலா் பூதட்டியப்பா, முன்னாள் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் கண்டன உரையாற்றினா்.

சாலைமறியல் காரணமாக தேன்கனிக்கோட்டை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேப்பனப்பள்ளியில் தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைச்செயலாளா் ஸ்டாலின் பாபு தலைமை வகித்தாா்.

குப்பம் சாலையில் இருந்து தபால் அலுவலகம் வரையில் ஊா்வலமாக வந்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திகிரியில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மாதையன் தலைமை தாங்கினாா். இதேபோல பாகலூரிலும் மறியல் போராட்டம் நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.