மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கரோனா தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.39 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் கரோனா தொற்று காலத்தின்போது 24,458 பயனாளிகளுக்கு ரூ. 2.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

Updated On :12 அக்டோபர் 2020, 7:51 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் கரோனா தொற்று காலத்தின்போது 24,458 பயனாளிகளுக்கு ரூ. 2.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில், திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறைவேற்றி வருகிறது. அதன்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள், ஆவின் பொருள்கள், நிவாரணத் தொகை, முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கினா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24,458 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. தசை சிதைவு நோய், முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட 17 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 17 லட்சம் மதிப்பிலான விலையில்லா மோட்டாா் பொருத்திய நகரும் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.