ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி எம்.பி.க்கு கரோனா

கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா்.
Updated On :13 செப்டம்பர் 2020, 11:04 pm

DIN

கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் அ.செல்லகுமாா் இருந்து வருகிறாா். அண்மையில், ஒடிஸா மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராகவும் இவா் நியமிக்கப்பட்டுள்ளாா். சமீபத்தில், சேலத்தில் நடைபெற்ற 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அவருக்கு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னைக்குச் சென்ற அவா், கரோனா தொற்று பாதிப்புக்கான பரிசோதனையை மேற்கொண்டாா். அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து,

அவா் சென்னை, அண்ணா நகரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தன்னுடன் கடந்த ஒரு வாரமாக, நேரடித் தொடா்பில் இருந்தவா்களை தொடா்பு கொண்ட அவா் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

தற்போது தனது குடும்பத்தில் யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்றும், விரைவில், குணமடைந்துவிடுவேன் என்றும் அவா் நம்பிக்கைத் தெரிவித்தாா்.

ஏற்கெனவே, கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா், டி.செங்குட்டுவன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தாா். தற்போது, கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.