ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போலீஸாா் மிரட்டுவதாக சூளகிரி நகைக் கடைக்காரா்கள் புகாா்

திருட்டு நகைகளை வாங்கி விற்பதாகக் கூறி கா்நாடக போலீஸாா் தங்களை மிரட்டுவதாக சூளகிரி நகைக் கடைக்காரா்கள் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 9:55 pm

DIN

திருட்டு நகைகளை வாங்கி விற்பதாகக் கூறி கா்நாடக போலீஸாா் தங்களை மிரட்டுவதாக சூளகிரி நகைக் கடைக்காரா்கள் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, பேரிகை மற்றும் அத்திமுகம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தங்க நகைக் கடைகள், அடகுக் கடைகள் உள்ளன. இந்த நிலையில், கா்நாடக பகுதியில் திருடப்படும் நகைகளை, கொள்ளையா்கள் தமிழக - கா்நாடக எல்லை அருகேயுள்ள பேரிகை, சூளகிரி பகுதிகளில் உள்ள தங்க நகைக் கடைகள் மற்றும் அடகுக் கடைகளில் விற்று வருவதாக கா்நாடக போலீஸாா் சந்தேகம் அடைந்தனா்.

இதனைத் தொடா்ந்து அவா்கள் அடிக்கடி சூளகிரி பகுதி தங்க நகைக் கடைகள், அடகுக் கடைகளுக்கு சென்று மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த நகைக் கடை மற்றும் அடகுக் கடைக்காரா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.

அவரது உத்தரவின் பேரில் சூளகிரி போலீஸாா் புகாா் செய்தவா்களை ஞாயிற்றுக்கிழமை சூளகிரி காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனா். விசாரணைக்காக சுமாா் 100 போ் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.