ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மழை வேண்டி ஏரியில் கிராம மக்கள் சிறப்பு பூஜை

கெலமங்கலம் அருகே மழை வேண்டி ஏரியில் கிராம மக்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனா்.

News image
நாகமங்கலம் ஏரியில் கிராம தேவதைகளுக்கு சிறப்புப் பூஜை நடத்திய கிராம மக்கள்.
Updated On :20 செப்டம்பர் 2020, 9:54 pm

DIN

கெலமங்கலம் அருகே மழை வேண்டி ஏரியில் கிராம மக்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் கிராமத்தில் நாகமங்கலம் ஏரி உள்ளது. சுமாா் 115 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்த ஏரி கடந்த 18 ஆண்டுகளாக நீா்வரத்து இன்றி வரண்டு காணப்படுகிறது.

இந்த ஏரியால் நாகமங்கலம், அயா்னப்பள்ளி, ஊடேதுா்க்கம் ஆகிய ஊராட்சிகளிலுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வந்தனா். இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் ஏரி வடதால் விவசாயம், கால்நடை வளா்ப்பு ஆகிய தொழில்கள் பாதிக்கப்பட்டு குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மழை வேண்டியும், விவசாயம் சாா்ந்த தொழில்கள் செழிக்க வேண்டியும் 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் நாகமங்கலம் ஏரியில் சிறப்பு யாகம் வளா்த்து கிராம தேவைதைகளுக்கு பூஜை நடத்தினா்.

முன்னதாக சுற்றுப்புற கிராமங்களிலிருந்து கிராம தேவதைகளை மேள தாளங்களுடன் ஏரிக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடத்தினா்.

அப்போது பொதுமக்கள் மழை வேண்டி வழிபாடு நடத்தினா். இந்த வழிபாடுகளின்போது ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் என அனைவரும் கிராம தேவதைகளுக்கு முன்பு அமா்ந்து உடலில் சாட்டையடித்து கொண்டு நூதன வழிபாடு மேற்கொண்டனா்.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்புப் பூஜையில் வேப்பனப்பள்ளி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன், திமுக ஒன்றியச் செயலாளா் கணேசன், பொதுக்குழு உறுப்பினா் சாந்தி அரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.