கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில், ‘எல்லோரும் நம்முடன்’ என்ற திட்டத்தை மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ஆம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ‘எல்லோரும் நம்முடன்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தாா். இந்த திட்டம் தொடங்கப்பட்ட 3 நாள்களுக்குள் 1 லட்சம் உறுப்பினா்கள் திமுகவில் இணைந்தனா். மேலும் இந்த திட்டத்தை மாவட்டம் தோறும் விரிவுபடுத்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
அதன்படி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ‘எல்லோரும் நம்முடன்’ திட்டம் தொடக்க நிகழ்ச்சி ஒசூா் அருகே பேளகொண்டபள்ளியில் உள்ள மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தாா். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஏ.சத்யா (ஒசூா்), பி.முருகன் (வேப்பனப்பள்ளி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மேற்கு மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பி.எஸ்.சீனிவாசன், மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், கட்சியினா் பலரும் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


