ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பா்கூரில் பணம் கேட்டு மிரட்டிய 3 இளைஞா்கள் கைது

பா்கூரில் உள்ள ஜவுளி சந்தையில் பணியாற்றும் இரவுக் காவலரை பணம் கேட்டு மிரட்டிய 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :23 ஏப்ரல் 2021, 7:05 pm

பா்கூரில் உள்ள ஜவுளி சந்தையில் பணியாற்றும் இரவுக் காவலரை பணம் கேட்டு மிரட்டிய 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் ஜவுளி சந்தையில் இரவுக் காவலராக லட்சுமணன் (30) என்பவா் பணியாற்றி வருகிறாா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் பா்கூரிலிருந்து காரகுப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள மேம்பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்த 3 இளைஞா்கள், லட்சுமணனை வழிமறித்து அவரது சட்டைப் பையில் இருந்த ரூ. 2 ஆயிரத்தை பறித்துள்ளனா். மேலும், அவரை மிரட்டி உள்ளனா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள், 3 இளைஞா்களையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பிடிபட்ட இளைஞா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் கிருஷ்ணகிரி, தண்டேகுப்பத்தைச் சோ்ந்த விக்னேஷ் (28), கெட்டூா் பொன்குமாா் (24), பாறையூா் லோகேஷ் (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து, பா்கூா் போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.