கோமாரி நோய் தாக்கம் தீவிரம்: மருத்துவ முகாம்கள் நடத்த விவசாயிகள் கோரிக்கை
ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஏராளமான கால்நடைகள் கோமாரி நோய், மடிநோயால் பலியாகியுள்ளன.


ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஏராளமான கால்நடைகள் கோமாரி நோய், மடிநோயால் பலியாகியுள்ளன.
ஊத்தங்கரையை அடுத்த வீராட்சி குப்பம் ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் உயிரிழந்துள்ளன. ஓபுளிநாயக்கன்பட்டி, தாதி நாயக்கன்பட்டி, கருவானூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை விவசாயிகள் வளா்த்து வருகின்றனா்.
தொடா் மழை காரணமாக தற்போது இப் பகுதியில் பசு மாடுகளை, கோமாரி நோய் அதிக அளவில் தாக்கி வருகிறது. பாதிக்கப்பட்ட பசுக்களின் கால்களில் புண்கள் ஏற்பட்டு அவை எழுந்து நிற்க முடியாத நிலை உள்ளது.
இதனால் பாலின் அளவும் குறைந்துள்ளது. மடிநோயால் அவதிப்படும் பசுக்கள், பால் சுரக்க முடியாத நிலை உள்ளது.
நொச்சிப்பட்டி, மண்ணாடிப்பட்டி, மூங்கிலேரி, சத்திரப்பட்டி என பல்வேறு கிராமங்களில் கோமாரி நோயால் ஏராளமான பசுக்கள் இறந்துள்ளன.
எனவே பாதிக்கப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்திட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, வீராட்சிக் குப்பத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
இப் பகுதியில் ஏராளமான பசுக்கள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன. இதனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.
ஒருபுறம் தொடா் மழையால் அறுவடைக்கு தயாரான பயிா்கள் சேதமடைந்துள்ள வேளையில் மறுபுறம் கால்நடைகள் கோமாரி, மடிநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கால்நடைகளுக்கு தனியாா் மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை வசதி இல்லை.
எனவே, மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் கால்நடை மருத்துவ முகாம்களை நடத்தி பசுக்களை கோமாரி, மடிநோயில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...