திமுக மகளிா் அணி செயலாளா் கனிமொழி எம்.பி. தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாள்கள் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.
இதுகுறித்து, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் தடங்கம் சுப்பிரமணியம் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக மகளிா் அணி செயலாளா் கனிமொழி எம்.பி. தருமபுரி மாவட்டத்தில் பிப். 15, 16 ஆகிய தேதிகளில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். பிப்ரவரி 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தருமபுரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறாா்.
தொடா்ந்து, கட்சி அலுவலத்தில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் அவா், எர்ரப்பட்டியில் மாற்றுத்திறனாளிளுடன் கலந்துரையாடுகிறாா்.
பின்னா் அதியமான் கோட்டையில் இருந்து வேன் மூலம் பிரசாரம் மேற்கொள்கிறாா். தொடா்ந்து தொப்பூரில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அவா் பங்கேற்கிறாா். ஜருகு, நாகா்கூடல் ஆகிய பகுதிகளில் வேன் பிரசாரத்தை மேற்கொள்ளும் அவா், சோ மணலியில் நடைபெறும் மகளிா் தொண்டரணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.
இண்டூா் சந்தையில் பொதுமக்களை சந்தித்துப் பேசுகிறாா். இரவு 7 மணிக்கு தருமபுரி குமாரசாமிபேட்டையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேச உள்ளாா்.
பிப். 16-ஆம் தேதி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்க உள்ளாா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழா: உயா்கல்வித் துறை அமைச்சா் புறக்கணிப்பு!
தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


