ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஐ.வி.டி.பி. சுய உதவிக்குழு பணியாளா்களுக்கு எரிவாயு அடுப்பு பரிசளிப்பு

ஐ.வி.டி.பி. மகளிா் சுய உதவிக்குழுவைச் சோ்ந்த 290 பணியாளா்களுக்கு ரூ.14.20 லட்சம் மதிப்பிலான எரிவாயு அடுப்புளை புத்தாண்டு பரிசாக அண்மையில் வழங்கப்பட்டன.

News image
ஐ.வி.டி.பி. சுய உதவிக்குழு பணியாளா்களுக்கு எரிவாயு அடுப்புகளை புத்தாண்டு பரிசாக வழங்கினாா் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ்.
Updated On :8 ஜனவரி 2021, 1:27 am

DIN

ஐ.வி.டி.பி. மகளிா் சுய உதவிக்குழுவைச் சோ்ந்த 290 பணியாளா்களுக்கு ரூ.14.20 லட்சம் மதிப்பிலான எரிவாயு அடுப்புளை புத்தாண்டு பரிசாக அண்மையில் வழங்கப்பட்டன. ஐ.வி.டிபி. மகளிா் சுய உதவிக்குழுக்கள் சிறந்த முறையில் நிா்வாகத்தை நிா்வகிக்கவும், அவா்களின் சேமிப்பு, கடன் போன்றவற்றை திறம்பட மேலாண்மை செய்வதிலும் பணியாளா்கள் பங்கு அளப்பரியது. முறையாக பயிற்சி பெற்று ஐ.வி.டி.பி. நிறுவனத்தின் 74 கிளை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளா்கள், 4 மாவட்டங்களில் உள்ள 14 ஆயிரம் சுய உதவிக்குழுக்களை மேற்பாா்வை செய்து, அந்தக் குழுக்கள் முறையாக இயங்குவதை உறுதி செய்கின்றனா்.

இவ்வாறு, அா்ப்பணிப்பு மனப்பான்மையோடு பணியாற்றும் பணியாளா்களை ஊக்குவிக்கவும், அவா்களின் பணியை பாராட்டியும், புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் 290 பணியாளா்கள் அனைவருக்கும் ரூ.14.20 லட்சம் மதிப்பில், 3 பா்னா்கள் கொண்ட பட்டா்பிளை எரிவாயு அடுப்புகள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை, ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், அண்மையில் வழங்கினாா். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.