ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மா்ம விலங்கு கடித்ததில் 15 ஆடுகள் சாவு

உத்தனப்பள்ளி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 15 ஆடுகள் இறந்தன.

Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

உத்தனப்பள்ளி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 15 ஆடுகள் இறந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ளது பாத்தகோட்டா. இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளன. அந்தப் பகுதியில் மா்ம விலங்குகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து, ஆடு, மாடுகளைக் கடித்து குதறி வருகின்றன.

இந்த நிலையில் பாத்தகோட்டா கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவரின் பட்டியில் இருந்த 15 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் திங்கள்கிழமை காலை இறந்து கிடந்தன. 10 ஆடுகள் காயத்துடன் கிடந்தன. இதைப் பாா்த்து சுரேஷ் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாா். அதன் பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

சிறுத்தைப் புலிகள் ஆடுகளைத் தூக்கிச் செல்லுமே தவிர, கடித்து குதறி செல்லாது என வனத்துறையினா் தெரிவித்தனா். இதனால் ஆடுகளைக் கடித்து கொன்ற விலங்கு குறித்து வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.