உத்தனப்பள்ளி அருகே மினி லாரியும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 30 பயணிகள் லேசான காயம் அடைந்தனா்.
தருமபுரியில் இருந்து ராயக்கோட்டை வழியாக ஒசூா் நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டது. அந்த பேருந்து உத்தனப்பள்ளி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதில் பெங்களூரில் இருந்து உருளை கிழங்கு ஏற்றிக் கொண்டுவந்த மினி லாரியும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டன. இதில் உருளை கிழங்கு ஏற்றிவந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 100 க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மூட்டைகள் சாலையில் விழுந்தன. ஓட்டுநா் லேசான காயம் அடைந்தாா். பேருந்தில் இருந்த 30 பயணிகளும் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களையும், உருளைக்கிழங்கு மூட்டைகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனா்.
இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

