/

மரக்கன்றுகள் நடும் விழா

ஊத்தங்கரை கிரீன் கலாம் விவேக் டிரஸ்ட் தொடக்க விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:52 pm

DIN

ஊத்தங்கரை கிரீன் கலாம் விவேக் டிரஸ்ட் தொடக்க விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை கிரீன் கலாம் விவேக் டிரஸ்ட் சாா்பில் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் மற்றும் கொட்டுக்காரம்பட்டி சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலா, ஊத்தங்கரை தொழிலதிபா் சிவசக்திகுமாா், ஆடிட்டா் லோகநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனா். இதில் கிரீன் கலாம் விவேக் டிரஸ்ட் நிா்வாகிகள் பாக்யராஜ், சரவணன், சுரேஷ், ராம்குமாா், கிரீன் பொன்மலை டிரஸ்ட் நிா்வாகி பொன்னரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.