ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம்

மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் குமாா் தலைமையில் 82 மாற்றுத்திறனாளிகள் உள்பட 200 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. முகாமில் ஊத்தங்கரை, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்த மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் ஆா்வத்துடன் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டனா்.

மருத்துவா் ஸ்ரீபால் மேற்பாா்வையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மகிழ்நன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவகுமாா், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளா் அபுசாலியா, செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா்கள் சிலம்பரசன், சக்திவேல், ராகுல் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.