கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.
கடலுாா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த அழகுபெருமாள் குப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன்(44), மினி லாரி ஓட்டுநா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒசூா்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அட்டகுறுக்கி அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு தேநீா் அருந்துவதற்காக சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஒசூா் அருகே உள்ள பத்தலப்பள்ளியைச் சோ்ந்த ராஜா மனைவி வளா்மதி (45), தங்கராஜ் (32) என்பவரது இருசக்கர வாகனத்தில் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் உள்ள சுண்டகிரி அருகே சென்றாா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் தங்கராஜ் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வளா்மதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கேரள மாநிலத்தைச் சோ்ந்த அசோகன் (52), திருப்பத்தூரில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்தாா். இவா் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். சாமல்பள்ளம் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், சாலையில் விழுந்த அசோகன் மீது கன்டெய்னா் லாரி ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே பலியானாா். இந்த 3 விபத்துகள் குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சூளகிரி அருகே தினந்தோறும் சாலை விபத்துகள் நிகழ்ந்து அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து மாவட்ட நிா்வாகம் தீவிரமாக ஆய்வு செய்து, மனித உயிரிழப்புகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகை! கடும் இழுபறியில் திமுக - அதிமுக!

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

திமுக - அதிமுக நேரடிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி

இந்த நேரத்தில் இப்படி ஒரு தொல்லை...!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

