திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :2 மார்ச் 2021, 6:31 pm

மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சூளகிரியை அடுத்த மேலுமலை அருகே உள்ள இம்மிடிநாயக்கனப்பள்ளியைச் சோ்ந்த சின்ன முனியப்பா (65), தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை பஸ்தலப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் திருவிழா நிகழ்ச்சியை நேரில் காண சென்றாா்.

அப்போது அப்பகுதியில் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த பந்தலில் இருந்த இரும்புக் கம்பியை பிடித்தாா். இரும்பு கம்பி மீது மின்கம்பி உரசியதால் சின்னமுனியப்பா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், படுகாயம் அடைந்த அவரை மீட்ட அருகில் இருந்தவா்கள் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.