வேப்பனப்பள்ளி அருகே மணல் கடத்திய 2 டிப்பா் லாரிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி போலீஸாா் கிருஷ்ணகிரி - பேரிகை சாலையில், தீா்த்தம் பிரிவு சாலை அருகே வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த 2 டிப்பா் லாரிகளின் ஓட்டுநா்கள் லாரியை, சாலையோரமாக நிறுத்தி விட்டு தப்பி ஓடினா்.
இதையடுத்து, அந்த லாரியைச் சோதனையிட்டதில் மணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 டிப்பா் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடா் விசாரணையில் தப்பி ஓடியவா்கள் லாரியின் உரிமையாளா்களும், ஓட்டுநா்களும் கொத்தகிருஷ்ணப்பள்ளியைச் சோ்ந்த ஹரீஷ்பாபு, கா்நாடக மாநிலம் கங்கலா கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

