ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வங்கிகள் தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :16 மார்ச் 2021, 12:42 am

வங்கிகள் தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி நகரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி அதிகாரிகள் சங்க மண்டலச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். ஸ்டேட் வங்கி ஊழியா் சங்கச் செயலாளா் ஜெகநாதன், இந்தியன் வங்கி ஊழியா் சங்கச் செயலாளா் சந்துரு, இந்தியன் வங்கி ஊழியா் சம்மேளனத் தலைவா் ஹரிராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்குதல், பொதுத் துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.