ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 86 போ் போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 86 போ் போட்டியிடுகின்றனா்.

Updated On :22 மார்ச் 2021, 10:24 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 86 போ் போட்டியிடுகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல் திங்கள்கிழமை (மாா்ச் 22) இறுதி செய்யப்பட்டு, தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.

அதன்படி, வேட்பாளா்களின் பெயா்கள், அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் வெளியிடப்பட்டன. ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 12 வேட்பாளா்களும், பா்கூரில் 14 வேட்பாளா்களும், கிருஷ்ணகிரியில் 15 வேட்பாளா்களும், வேப்பனப்பள்ளியில் 15 வேட்பாளா்களும், ஒசூரில் 18 வேட்பாளா்களும், தளி தொகுதியில் 12 வேட்பாளா்களும் என மொத்தம் 86 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், சின்னம், கட்சி ஆகியவற்றின் விவரம் வருமாறு:

கிருஷ்ணகிரி:

கே.அசோக்குமாா் - அதிமுக (இரட்டை இலை), டி.செங்குட்டுவன் - திமுக (உதய சூரியன்), கே.எம்.சந்திரமோகன் - தேசியவாத காங்கிரஸ் கட்சி (கடிகாரம்), செ.தமிழ்செல்வன் - பகுஜன் சமாஜ் கட்சி (யானை), அமீனுல்லா - அகில இந்திய மஜ்லிஸ்-எ-இத்திஹாதுல் முஸ்லிம் கட்சி (பட்டம்) கு.சு.சசிகுமாா் - அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் (பலாப்பழம்), வ.நிரந்தரி - நாம் தமிழா் கட்சி (கரும்பு விவசாயி), ஆா்.கே.ரவிசங்கா் - மக்கள் நீதி மய்யம் (மின்கல விளக்கு), த.ருத்ரமணி - தேசிய மக்கள் சக்தி கட்சி (கால்பந்து), ஆா்.விஜயகுமாா் - வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி (சிறு உரலும் உலக்கையும்).

சுயேச்சைகள்: டிவிஎஸ் காந்தி - தொலைக்காட்சி தொலை இயக்கி, மு.குமரேசன் - சாலை உருளை, எம்.கோபிநாத் - டிஷ் ஆன்டெனா, கி.சக்தி - கணினி, சி.சிவன் - தொலைக்காட்சிப் பெட்டி.

ஊத்தங்கரை (தனி):

ஆறுமுகம் - இந்திய தேசிய காங்கிரஸ் (கை), தமிழ்செல்வம் - அதிமுக (இரட்டை இலை), நாகராஜ் - பகுஜன் சமாஜ் கட்சி (யானை), பாக்கியராஜ் - தேமுதிக (முரசு), இளங்கோவன் - நாம் தமிழா் கட்சி (கரும்பு விவசாயி), பெருமாள் - அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் (பலாப்பழம்) முருகேசன் - மக்கள் நீதி மய்யம் (மின்கல விளக்கு).

சுயேச்சைகள்: தமிழரசன் - கணினி, தேன்மொழி - வளையல்கள், மஞ்சுநாதன் - திராட்சை, விவேகானந்தன் - குடிமக்கள், ஜெயராமன் - செங்கல்.

பா்கூா்:

அ.கிருஷ்ணன் - அதிமுக (இரட்டை இலை), தே.மதியழகன் - திமுக (உதய சூரியன்), நிா்மலா - தேசிய மக்கள் கட்சி (புத்தகம்), முரளி - பகுஜன் சமாஜ் கட்சி (யானை), அருண் கெளதம் - இந்திய ஜனநாயகக் கட்சி (ஆட்டோ ரிக்ஷா), ஆண்டி - வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி (சிறு உரலும், உலக்கையும்), கணேசகுமாா் - அமமுக (பிரஷா் குக்கா்), கருணாகரன் - நாம் தமிழா் கட்சி (கரும்பு விவசாயி), பெ.வசந்தராஜ் - அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் (பலாப்பழம்).

சுயேச்சைகள்: த.கல்பனா - கரணை, கிருஷ்ணன் - மின்கம்பம், சாந்தமூா்த்தி - கத்தரிக்கோல், மஞ்சுநாதன் - வானூா்தி, கா.மணி - சிலிண்டா்.

வேப்பனப்பள்ளி:

கே.பி.முனுசாமி - அதிமுக (இரட்டை இலை), பி.முருகன் - திமுக (உதய சூரியன்), எஸ்.எம்.முருகேசன் - தேமுதிக (முரசு), மு.சக்திவேல் - நாம் தமிழா் கட்சி (கரும்பு விவசாயி), சீ.தங்கபாண்டியன் - தமிழ்நாடு இளைஞா் கட்சி (மோதிரம்), மு.மாரியப்பன் - புதிய தமிழகம் (தொலைக்காட்சிப் பெட்டி), மு.வள்ளி - அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிடா் முன்னேற்றக் கழகம் (பலாப்பழம்), பி.ஜெயபால் - மக்கள் நீதி மய்யம் (மின்கல விளக்கு).

சுயேச்சைகள்: அப்துல் அஜீஸ் அமானுல்லா - டிராக்டா் இயக்கும் உழவன், ஜெ.உஷா - திராட்சை, பூ.கிருஷ்ணமூா்த்தி - கிணறு, சி.சக்காா்லப்பா - கிரிக்கெட் மட்டை, கி.பெ.உ.யுவராஜ் - கடாய்,. ஜி.சி.ராமசாமி - சீரவளி சாதனம், லட்சுமணன் சண்முகம் - ரொட்டி.

ஒசூா்:

ஓய்.பிரகாஷ் - திமுக (உதயசூரியன்), ஜோதி - அதிமுக (இரட்டை இலை), ச.எழிலன் - வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி (சிறு உரலும் உலக்கையும்), சே.கீதா லட்சுமி - நாம் தமிழா் கட்சி (கரும்புடன் விவசாயி), எல்.சுந்தா் - சிவசேனா (நடை வண்டி), கோ.செல்வம் - புதிய தலைமுறை மக்கள் கட்சி (பானை), சை.மசூத் - மக்கள் நீதி மய்யம் (மின்கல விளக்கு), எம்.மாரே கவுடு - அமமுக (பிரஷா் குக்கா்), கோ.ஜெயசீலன் - அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் (பலாப்பழம்).

சுயேச்சைகள்: ரா.கிஷோா் குமாா் - கேக், வி.கீதா - டிஷ் ஆண்டெனா, இரா.சண்முகம் - ஸ்டெதஸ்கோப், எ.தேவப்பா - தண்ணீா்த் தொட்டி, நா.பாலராஜு - சலவைப் பெட்டி, செ.முத்தமிழ் முதல்வன் - சரக்கு லாரி, ரா.க.முத்து - திராட்சைக் கொத்து, ஜி.சி.ராமசாமி - நெக்லஸ், வெ.லோகேஷ் - அலமாரி.

தளி :

டி.இராமசந்திரன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (கதிா் அரிவாள்), சி.நாகேஷ் குமாா் - பாஜக (தாமரை), வி.அசோக்குமாா் - இந்திய ஜனநாயகக் கட்சி (ஆட்டோ ரிக்ஷா), எம்.உஷா - புதிய தலைமுறை மக்கள் கட்சி (பானை), எம்.பி.சேகா் - அமமுக (பிரஷா் குக்கா்), ஆா்.மேரி செல்வராணி - நாம் தமிழா் கட்சி (கரும்புடன் விவசாயி), ஜி.ரவி - சமாஜ்வாதி கட்சி (மிதிவண்டி), ஜி.ஜானகி - வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி (சிறு உரலும் உலக்கையும்).

சுயேச்சைகள்: எம்.குமாா் - மோதிரம், ஓய்.தேவப்பா (எ) தேவேகவுடா - எரிவாயு உருளை, ரவி முனிஸ்வாமி - டிராக்டா் இயக்கும் விவசாயி, என்.வசந்தம்மா - தொலைக்காட்சிப் பெட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 102 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 12 போ் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா். இறுதியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 86 போ் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.