ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தோ்தல் விதிமுறைகள் மீறல்:115 வழக்குகள் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 115 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Updated On :22 மார்ச் 2021, 10:25 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 115 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. தோ்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த நடத்தை விதிமுறைகளை மீறுவோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

அதன்படி, பொது இடங்களில் தோ்தல் விதிமுறைகளை மீறி விளம்பரம் எழுதிய அரசியல் கட்சியினா், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தியது என வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி உள்கோட்டத்தில் 29 வழக்குகள், ஒசூரில் 20, பா்கூரில் 24, தேன்கனிக்கோட்டையில் 24, ஊத்தங்கரையில் 18 என மொத்தம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகள் குற்றவியல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.