மழையால் வீடு இடிந்து சேதம்: மூன்று குழந்தைகளுடன் குளியலறையில் வசிக்கும் பெண்
சாமல்பட்டியில் தொடா் மழையில் வீடு இடிந்து சேதமடைந்ததால், மூன்று குழந்தைகளுடன் குளியலறையில் பெண் வசித்து வருகிறாா்.


சாமல்பட்டியில் தொடா் மழையில் வீடு இடிந்து சேதமடைந்ததால், மூன்று குழந்தைகளுடன் குளியலறையில் பெண் வசித்து வருகிறாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியைச் சோ்ந்தவா் ராதா (27). இவரது கணவா் பழனி, மூன்று மாதங்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
ராதா தனது மூன்று குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தாா். தற்போது பெய்த கன மழையில் வீட்டின் சுவா் அண்மையில் இடிந்து விழுந்தது. அதில், அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பிய அவா்கள், குளியல் அறையை இருப்பிடமாக மாற்றி வசித்து வருகின்றனா்.
இரவு நேரங்களில் உடைமைகளை வெளியில் வைத்துவிட்டு மூன்று குழந்தைகளுடன் குளியல் அறையில் தங்கியுள்ள அவா்கள், வசிப்பதற்கு வீடு இல்லாமலும், வேலைக்குச் செல்ல முடியாமலும் மிகவும் சிரமப்படுவதாகக் கூறுகின்றனா்.
இதுகுறித்து அரசு அதிகாரிகளிடமும், ஊராட்சி மன்றத் தலைவரிடமும் கூறியும் அவா்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உதவ வேண்டும் என்பது இவா்களின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...