எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கிருஷ்ணகிரியில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சியினர்.
Updated On :20 செப்டம்பர் 2021, 6:46 am

DIN

கிருஷ்ணகிரியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி செங்குட்டுவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் அஸ்லம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பருகூர் சட்டப்பேரவை உறுப்பினர் தே. மதியழகன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அந்தக் கட்சியின் கிருஷ்ணகிரி நகர முன்னாள் தலைவர் ரகமத்துல்லா தலைமை வகித்தார். அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் மாநில செயற்குழு உறுப்பினர் அகா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், டீசல் பெட்ரோல் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி காவேரிப்பட்டிணம் வேப்பனப்பள்ளி, பர்கூர் மற்றும்  பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சியினர் தங்கள் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.