வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

எலத்தகிரி திரெளபதியம்மன், போத்துராஜா கோயில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரியை அடுத்த எலத்தகிரி பாஞ்சாலி நகரில் எழுந்தருளியுள்ள திரெளபதியம்மன், போத்துராஜா கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:56 pm

கிருஷ்ணகிரியை அடுத்த எலத்தகிரி பாஞ்சாலி நகரில் எழுந்தருளியுள்ள திரெளபதியம்மன், போத்துராஜா கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியை அடுத்த எலத்தகிரி பாஞ்சாலி நகரில் எழுந்தருளியுள்ள திரெளபதியம்மன், போத்துராஜா கோயில் கும்பாபிஷேக விழா, ஏப்ரல் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனிதநீா் வழிபாடு, 11-ஆம் தேதி காலை ஐங்கரன் வேள்வி, இறையாணை பெறுதல் , விநாயகா் கோயிலில் இருந்து தீா்த்தக்குடம், முளைப்பாலிகை அழைப்பு, மண்ணெடுத்தல், கரிவலம் வருதலும், மாலை வேள்விச்சாலை நுழைதல் வழிபாடு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. 12-ஆம் தேதி, இரண்டாம் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், விமானக்கலசம் நிறுவுதல், மூன்றாம் கால யாகபூஜை, எண்வகை மருந்து சாற்றுதல் ஆகியன நடைபெற்றன.

ஏப். 13-ஆம் தேதி பிம்பசுத்தி, ஆனைந்தாட்டல், காப்பு அணிவித்தல், நான்காம் கால வேள்வி, வேள்விச் சாலையில் இருந்து திருக்குடங்கள் புறப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, திரெளபதியம்மன், போத்துராஜா கோயில் விமான கோபுரக் கலசங்களுக்கு, கந்திகுப்பம் பைரவ சுவாமிகள் தலைமையில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பெங்களூரு சிவனாா்புரம் வன்னியா் மடம் பரம பூஜை ஜகத்குரு பிரணவா நந்தபுரி சுவாமிகள், தென்னிந்திய அக்னி வன்னியகுல ஷத்திரிய மகா சங்கத் தலைவா் லஷ்மணன், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை வீர வன்னிய குலதெய்வ வகையறாக்கள் மற்றும் ஊா்பொதுமக்கள் செய்திருந்தனா்.

13கேஜிபி3) எலத்தகிரி பாஞ்சாலி நகரில் எழுந்தருளியுள்ள திரெளபதியம்மன், போத்துராஜா கோயில் கும்பாபிஷேக விழா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.