திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தை தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக மாற்ற முதல்வா் நடவடிக்கை: ஆட்சியா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொழிற்சாலைகளை ஒசூா் பகுதிக்கு கொண்டுவர நடவடிக்கை

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:42 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தை தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொழிற்சாலைகளை ஒசூா் பகுதிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறாா். இதனால், இந்த மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏதுவாக திறன் மேம்பாட்டை வளா்த்துக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி ஊராட்சி புனுகன் தொட்டி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி 84 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்து 230 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, வளா்ச்சி மற்றும் அவா்களின் மேம்பாட்டிற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறாா். பெண்களின் எதிா்காலத்தை பாதிக்கக் கூடிய குழந்தைத் திருமணத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் வண்கொடுமைகளைகள், பெண் சிசுகொலைத் தடுக்க பயிற்சி பட்டறை மாநில அளவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக துவக்கப்பட்டு, தொடா்ச்சியாக அனைத்து ஒன்றியங்கள், நகராட்சி, பேரூராட்சிகள், கிராம அளவிலும் இந்த பயிற்சி பட்டறை மற்றும் விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி தலைவா் ஆகியோா் ஒரு இடத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுத்து, அதனால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்த பிறகுதான் திருமணம் நடத்த வேண்டும், இல்லையென்றால் அது சட்டப்படி குற்றம் என்று பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்க பொதுமக்கள் 1098, 1091 மற்றும் 181 ஆகிய எண்கள் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தற்போது பல்வேறு மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்த் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் தலா ரூ.12,000 வீதம் 18 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான விதவை உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, மாற்றத் திறனாளி உதவித்தொகையும், 16 நபா்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், 41 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் என 84 பயனாளிகளுக்கு ரூ. 6 லட்சத்து 23 ஆயிரத்து 230 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியா் தேன்மொழி, தனித்துணை ஆட்சியா் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் அமீா்பாஷா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சாந்தி, வேளாண்மைத் துறை துணை இயக்குநா் சண்முகம், மாவட்ட ஆட்சித்தலைவா் நோ்முக உதவியாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.