வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.


வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஊத்தங்கரையை அடுத்த மருதம் நகரைச் சோ்ந்த சிவா (41), ஊத்தங்கரையில் மெடிக்கல் கடை வைத்துள்ளாா். புதன்கிழமை காலை கடைக்கு அவா் சென்ற நிலையில், அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு மதிய உணவு எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றுள்ளாா். பின்னா் மாலை 4 மணி அளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு சத்தம் போட்டுள்ளாா். அப்போது, வீட்டிலிருந்து தப்பிய இளைஞரை அருகில் இருந்தவா்கள் பிடித்து ஊத்தங்கரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா் வேலூா் மாவட்டம், முத்து மண்டபம், கள்ளி கோயில் தெருவைச் சோ்ந்த லோகேஷ் (24) என்பது தெரியவந்தது. அவருடன் வந்த மணி என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...