நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானங்களை ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:48 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானங்களை ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் தனுஷ் (42), உதவியாளா் இளையராஜா (38) உடன் அரசு மதுபானங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலை வழியாக தருமபுரி நோக்கி சென்றாா். மிட்டப்பள்ளி அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த பெரும்பாலான மதுப்புட்டிகள் உடைந்து சேதமடைந்தன. இதையடுத்து, சாலை வழியாகச் சென்ற ஏராளமானோா் அங்கிருந்த மதுப்புட்டிகளை அள்ளிச் சென்றனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்சாண்டா், சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் அவா்களை அங்கிருந்து விரட்டி அடித்து, இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.